புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம்வரும் ரஜினி, கோடிக்கணக்கான ரசிகர்களை தனது பார்வையாளும் துரு துரு நடிப்பாலும் கட்டிப்போட்டுள்ளார் என்றால் மிகையாகாது.

கோச்சடையான் படத்தில் தந்தை மகன் என இரு கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக. இயக்குனர் சவுந்தர்யா கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தை ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது 3டியில் புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.

கடந்தவாரம் இப்படத்தின் டப்பிங் பணியில் பங்கேற்ற ரஜினிகாந்த் தான் நடித்த காட்சிகளின் முதல்பாதி வரையான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்தார்.

வரும் மே மாதம் 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடக்கவுள்ள கேன்ஸ் படவிழாவில் ‘கோச்சடையான்‘ படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது.

ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு டிரைலரை வெளியிடும் இவ்விழாவில் அமிதாப்பச்சன் நடிக்கும் ‘தி கிரேட் கேட்ஸ்பை‘ என்ற ஹாலிவுட் படத்தின் அறிமுக நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி அமிதாப்பும் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

கோச்சடையான் பற்றி சவுந்தர்யா கூறுகையில்,‘நேர்மையும், தெய்வீக குணம் கொண்ட கோச்சடையான் என்ற தந்தை கதாபாத்திம், ராணா என்ற மகன் வேடம் என இரட்டை கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

தந்தை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஷோபனா, மகன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் அப்பாவின் வழக்கமான பார்முலாவை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top