புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அரபு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த(2012) ஆண்டில் மட்டும் இங்கு 76 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதியின் வடமேற்கு பகுதியான தபூக் நகரில் வசித்த பெண்ணை கற்பழித்த பின்னர் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் அலி கோலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீது நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அம்ஜத் அலி கோலியின் தலையை துண்டித்து நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 33 பேருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top