புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மரியான் படத்தில் தனுஷ் புகைப் பிடிக்கும் காட்சிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால், புகைபிடிக்கும் காட்சியை நீக்க முடிவு செய்துள்ளனர்.

தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மரியான் படத்தின் விளம்பரத்தில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டு உள்ளனர்.

புகை பிடிக்கும் காட்சிகள் விளம்பரங்களில் இடம் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று ரஜினி காந்த் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவரது மருமகன் தனுஷ் புகை பிடிக்கும் காட்சியில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

'மரியான்' படத்தில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெறாமல் தனுஷ் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து புகை பிடிக்கும் காட்சிகளை நீக்க தனுஷும் இயக்குநர் பரத் பாலாவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top