இந்தியா-டெல்லியில் நோயை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் 10 வயது சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கணு லால் என்ற மாந்திரீகரிடம் அழைத்துச் சென்றால் தலைவலி குணமாகும் என்று பக்கத்துவீட்டுக்காரர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் அவரை அழைத்துக் கொண்டு தெற்கு டெல்லியில் உள்ள கோவிந்த்புரி பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார்.
அங்கு கணு லாலை சந்தித்த அவர் தனது மகளை குணப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். தான் சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறிய லால் சிறுமியை மட்டும் தன்னுடன் அந்த அறையில் விட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து லால் சிறுமியை கற்பழித்துவிட்டு ஓடிவிட்டார். அதன் பிறகு சிறுமி நடந்ததை தனது தாயிடம் தெரிவித்தார். சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் லாலை நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.