புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 68-வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.


டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 1 ரன்னிலும், பட்டேல் 2 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த அணியின் கேப்டன் ஒயிட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய சமன்த்ரே மற்றும் சமி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சமன்த்ரே 55 ரன்னிலும், சமி 23 ரன்னிலும் பால்க்னர் வீசிய பந்தில் அவுட் ஆனார்கள்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய பால்க்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

137 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்கள் டிராவிட் மற்றும் ரஹானே நிதானமாக விளையாடினர்.

டிராவிட் 25 ரன்னில் ஒயிட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த வாட்சன் (11), சாம்சன் (5), பின்னி (8), ஹோட்ஜ் (8), சொற்ப ரன்னில் வெளியேறி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து தோல்வியை நோக்கி சென்றது ராஜஸ்தான். அணியில் அதிகபட்சமாக கூப்பர் 26 ரன்கள் எடுத்தார்.

ஐதராபாத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

ஐதராபாத் அணியில் ஸ்டெயின், மிஸ்ரா, கரன் சர்மா, பெரெரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 
Top