புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நம்பியார் என்றால் இப்போதும் மூக்கில் கோபத்தைக் காட்டும் அறுபது வயது எம்‌ஜிஆர் ரசிகர்கள் இருக்கிறார்கள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை மாதி‌ரிதான் இவர் இல்லை என்றால் அவர் இல்லை.


ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்பியார் உத்தமர். புகை கிடையாது... புலால் கிடையாது... மது கிடையாது... மாது கிடையாது... ஒன்லி ஆன்மீகம்.

மறைந்த நம்பியார் பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது. காமெடிப் படம். ஸ்ரீகாந்த் ஹீரோ. கோல்டன் ஃபிரைடே என்ற நிறுவனம் படத்தை தயா‌ரிக்கிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

பாகன் படத்துக்குப் பிறகு காமெடிக்கு முக்கியத்துவம் தருகிறார் ஸ்ரீகாந்த். தற்போது ஓம் சாந்தி ஓம் படத்தில் பிஸியாக இருப்பவர் அதையடுத்து நடிக்கிற படம்தான் இந்த நம்பியார். ஜோடி சுனைனா.

படம் நெடுக இரண்டாவது ஹீரோ போல் வருகிறார் சந்தானம். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு. கணேஷா என்பவர் படத்தை இயக்குகிறார்.
நம்பியார், ஸ்ரீகாந்த், காமெடி படம்
 
Top