புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆலையடிவேம்பு நாவற்காடு பிரதேசத்தில் தூக்கில் தொங்கி நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

நாவற்காட்டைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான சுதாகரன் சுமதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மூத்த பிள்ளை பாடசாலை சென்று திரும்பி வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டியிருந்துள்ளது.



தாயாரை தேடிய நிலையில் பூட்டிய வீட்டினுள் அறையினுள் தாயார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உட்சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பவிசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் கணவனார் கடந்த 2012 ம் ஆண்டு நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
Top