பெண்களால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த களுத்துறை பொலிஸார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண்களையும் கைது செய்தனர்.
தமது எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது தமது மனைவியர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கைதான பெண்களின் கணவன்மார் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே களுத்துறைப் பொலிஸார் கடந்த 13ஆம் திகதி இந்த சூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
கைதான பெண்களில் பலர் பேரன், பேத்திமாரையுமுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.