புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


1. எந்த மாதிரியான கதைகளுக்கு முன்னுரிமை தருகிறீர்கள்?



இந்த மாதிரி கதைகளில் தான், நடிக்க வேண்டும் என்ற, எந்த திட்டமும் என்னிடம் இல்லை. சொல்லப்போனால், “கும்கி மற்றும் சுந்தரபாண்டியன் படங்களில் நடிப்பதற்கு முன், கதையே கேட்கவில்லை. இப்போது வரை, அப்படி தான் சென்று கொண்டிருக்கிறது.

2. எந்த நம்பிக்கையில் கதையே கேட்காமல் நடிக்கிறீர்கள்? என்னை தொடர்பு கொள்ளும் இயக்குனர்களும், அப்படங்களில் நடிக்கும் நடிகர்களும், கதைக்காக, வெற்றிக்காக கடுமையாக உழைப்பவர்களாக இருக்கின்றனர். அதனால், அவர்கள் மீது ஏற்படும் நம்பிக்கையினால் கதையை கேட்காமல் நடிக்கிறேன்.

3. மீண்டும் சசிகுமாருடன் நடிப்பது பற்றி?

“சுந்தரபாண்டியனில் நான் நடித்தது, அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் தான், இரண்டாவது வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. இப்படமும், பெரிய வெற்றி பெற வேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.


4 “கும்கி பட விழாவில் நடிகர் பிரபு உங்களை பராட்டியது பற்றி?


அந்த விழாவில், அம்பிகா – ராதா – ரேவதி ஆகியோரின் கலவை என, என்னை பிரபுசார் பாராட்டினார். இது, சரியோ, தவறோ எனக்குத் தெரியாது. ஆனால், அப்படியொரு கருத்தை, பிரபு சார் கூறியது, சந்தோஷமாக இருந்தது. அதை, “கும்கியில் நடித்ததற்காக, நான் பெற்ற விருதாக கருதுகிறேன்.

5 கிளாமராக நடிக்க மறுக்கிறீர்களாமே?

நடிப்புத் திறமையை காண்பிப்பதற்காகவே, சினிமாவுக்கு வந்துள்ளேன். உடம்பைக் காட்ட அல்ல. அதே சமயம், கதைக்கு அவசியம் என்கிற போது, மாடர்ன் உடையணிந்து, மிதமான கிளாமரை வெளிப்படுத்துவே
 
Top