மாதம்பை முக்குனுவட்டுன பகுதியில் ஓலை குடிசையொன்று தீ பற்றியத்தில் குழந்தை உயிரிழந்தமை தொடர்பி்ல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுவனின் தாய் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தபோது நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொரிவித்துள்ளனர்.
வீட்டிலுள்ள அடுப்பில் இருந்து தீ பரவி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஒரு வயதும் மூன்று மாதங்களும் நிரம்பிய குழந்தையே தீயில் கருகிஉயிரிழந்துள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது.