இந்தியா-தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாளையமத்தில் 30 வயதான நபர் தனது 50 வயது அண்ணியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் தலைமறைவாகி விட்டார்.
தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்த ஈச்சம்பாளையத்தை சேர்ந்தவர் பீமன். இவரது மனைவி பெயர் குப்பம்மாள். 50 வயதானவர். பீமன் இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்தார் குப்பம்மாள்.
இந்த நிலையில் 12ம் தேதியன்று பீமனின் தம்பியான 30 வயது மாது குப்பம்மாள் வீடு சென்றார். பின்னர் குப்பம்மாளின் நெற்றியில் ஏதோ மை வைத்தாராம்.
இதையடுத்து குப்பம்மாள் மயக்கமாகி விட்டாராம். மயக்கம் எழுந்து பார்த்தபோது தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தாராம்.
இதுகுறித்து மாது மீது அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் மாதுவைத் தேடி வருகின்றனர்.