சவூதி அரேபியாவின் குடியேற்ற சட்டத்தை மீறி அங்கு தங்கயிருந்த ஆசியா நாட்டைச் சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் மரணமடைந்ததால் அந்நாட்டின் தண்டனைக்குப் பயந்து சடலத்தை
மறைத்து வைத்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்கா நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பம் தங்கியிருந்த தொடர்மாடியில் வசித்தவர்களுக்கு இறந்த உடலின் மணம் வீச, சந்தேகத்தில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்குட் படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மரணம் இயற்கையாகவே சம்பவித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதன் பின்னரே குறித்த குடும்பம் சவூதி அரேபியாவின் குடியேற்ற சட்டத்தை மீறி தங்கியிருப்பதும் இதற்காகவே சடலத்தை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.