பிரபுதேவாவைவிட்டு பிரிந்து வந்ததில் இருந்தே ஆர்யா-நயன்தாராவை இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நேற்று அந்த செய்தியை உண்மையாக்கும்
வகையில், ஆர்யா வெட்ஸ் நயன்தாரா. தேதி மே 11, நேரம்- இரவு 9 மணி என்று அச்சிடப்பட்டு ஒரு இ-மெயில் வந்தது.
அப்படியென்றால் வழக்கம்போல் கிசுகிசுக்கள் உண்மையாகி விட்டதா? என்று மேலும் இந்த அழைப்பிதழைப் படித்தால், ஆர்யா-நயன்தாரா நடித்து வரும் ராஜாராணி படத்துக்காகத்தான் இப்படியொரு பப்ளிசிட்டியை வியூகத்தை கையாண்டிருப்பது தெரியவந்தது.
அதில், இந்த செய்தி நீண்டநாட்களாக பரவி வரும் செய்திதான். இதை அறியாதவரோ, புரியாதவரோ இருக்க முடியாது. நெஞ்சை அள்ளிய அரசியை, அரசன் தன்னிலை மறக்க செய்யும் தருணம். இது அரங்கேறும் நாள் நாளை என்று மேலும் அச்சிடப்பட்டிருந்தது.
முன்பெல்லாம் நடிகர்-நடிகைகள் தங்களை மற்றவர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானாலே மார்க்கெட் சரிந்து விடுமோ என்று பயந்த காலமாக இருந்தது.
ஆனால், இப்போது, இந்த விசயத்தை ஆர்யா-நயன்தாரா இருவரின் அனுமதியுடனேயே இந்த புதுமையான பப்ளிசிட்டியை செய்திருக்கிறார்கள். ஆக, மைனஸைகூட ப்ளஸ்ஸாக்க தொடங்கி விட்டார்கள் நம்மூர் சினிமாக்காரர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக