புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கண்டி, கட்டுகஸ்தோட்ட பகுதியில் 12 வயதான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.

சந்தேகநபர் 37 வயதான திருமணமாகாத ஒருவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுவன் பாடசாலை சென்று வீடு திரும்பிய போது சந்தேகநபரால் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிறுவனின் நண்பர்கள் அவனது தாயாருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

இதன்பின்னர், தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top