புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவின் பிரபல திரைப்பட இயக்குனரான ஷாங் இமோயுஸ் சீன அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மீறி 7 குழந்தைகள் பெற்றதற்காக அவர்
மீது விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். இதனை மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் இயக்குனர் ஷாங் 7 குழந்தைகளைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே இவர் மீது விசாரணை நடத்தவுள்ளதாக வுஸி மாநகராட்சி குடும்பநலத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 61 வயதான ஷாங்கிற்கு பிறந்ததாக கூறப்படும் 7 குழந்தைகளும் அவருடையதுதானா? என்ற சந்தேகமும் நிலவுதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச்hட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 26.05 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 328 கோடியே 54 இலட்சம்) அபராதம் விதிக்கப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top