ஐ.பி.எல். கிரிக்கெட் 58 லீக் போட்டி இன்று மாலை புனேவில் தொடங்கியது. இதில் புனே-மும்பை அணிகள் மோதின.
டாஸ் வென்ற புனே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யுத்தப்பா மற்றும் பின்ஞ் களம் இறங்கினார்கள்.
யுத்தப்பா 13 ரன்னிலும் பின்ஞ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பின் வந்த வீரர்கள் மும்பையின் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறினார்கள்.
3வது வீரராக களம் இறங்கிய பாண்டே 29 ரன்னிலும், 4வது வீரராக வந்த யுவராஜ் சிங் 33 ரன் எடுத்தும் அவுட் ஆனார்கள். அதன்பின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக புனே வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஜான்சன், அகமது, மல்லிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதில் ஜான்சன் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் தெண்டுல்கர் களம் இறங்கினர்.
ஆட்டத்தின் முதல் பந்திலிலேயே ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் திண்டாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து கார்த்திக் களம் இறங்கி தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார்.
தெண்டுல்கர் 15 ரன்னிலும், கார்த்திக் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பின் களம் இறங்கிய சர்மா மற்றும் ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்க ஆரம்பித்தனர். ராயுடு 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சர்மா 37 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனே அணியில் திண்டா அதிகபட்சமாக 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக