புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரியல் மெட்ரிட் அணியின் 86 வயதான முன்னாள் சிறந்த உதைபந்தாட்ட வீரரான அல்பிரடோ டி ஸ்டிபனோ கொஸ்டாரிக்காவைச் சேர்ந்த 36 வயதுடைய தனது காதலியை திருமணம்
செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1956 – 1960ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ரியல் மெட்ரிட் அணி ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் அல்பிரடொவும் ஒருவர்.

இக்காலப்பகுதியில் 1957 மற்றும் 1959ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் ஆண்டின் சிறந்த வீரராக தெரிவானார். அத்துடன் ஆர்ஜென்டினாவில் பிறந்த இவர் அவ்வணியின் வீரராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 86 வயதாகும் அல்பிரடொவின் மனைவி கடந்த 2005ஆம் ஆண்டில் மரணமானார். இவர்களுக்கு 7 குழந்தைகள் உண்டு.

அல்பிரடொ 2007ஆம் ஆண்டு தனது சுயசரிதை எழுதுவற்கு தயாரானார். இதற்கு உதவியாக வந்தவரே இப்போது காதலியாக மாறியுள்ள சொன்சலிஸ். தற்போது அல்பிரடொவின் செயலாளராகவும் முகாமையாளராவும் பிரதிநிதியாகவும் உதவிசெய்து வருகிறார்.

36 வயதாகும் அல்பிரடொவின் காதலியான கொன்சலிஸ் கொஸ்டாரிக்காவைச் சேர்ந்தவர். இக்காதல் ஜோடி இம்மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அல்பிரடொ கூறுகையில், நான் வயதானவன் ஆனால் இளமையான இதயத்தைக் கொண்வன் எனத் தெரிவித்துள்ளார்.

காதலுக்கு கண்தான் இல்லையென்றால் வயதும் இல்லையா?





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top