புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரு இலட்சம் ரூபாவுக்கு மூன்று இலட்சம் ரூபா தருவதாகக் கூறும் கள்ளநோட்டு அச்சிடும் கும்பலொன்றை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கள்ள நோட்டு அச்சிடுவதற்குப் பயன்படுத்தப் படுவதாகக் கூறப்படும் பேப்பர் கட்டுக்கள், இரசாயனத் திரவியங்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ ஒன்று ஆகியவற்றுடன் நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் ஒன்றுக்கு மூன்று வீதம் பணம் தருவதாகக் கூறி பேரத்தில் ஈடுபட்டிருந்த போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மதுரங்குளி பிரதேசத்தையும் மற்றையவர் ராகல பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ராகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவர் என்றும் தெரிய வருகிறது.

குறித்த கள்ளநோட்டுக் கும்பல் குறித்து புத்தளம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து மூன்று இலட்சம் ரூபாவுக்கு 10 இலட்சம் ரூபா தருமாறு கூறி மாறுவேடத்தில் சென்றே பொலிஸார் இந்தக் குழுவைக் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top