புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் 59வது லீக் போட்டி இன்று இரவு பஞ்சாப் மொகாலி மைதானத்தில் தொடங்கியது. இதில் பஞ்சாப்-ஐதராபாத் அணிகள் மோதின.


டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக தவான் மற்றும் பட்டேல் களம் இறங்கினர்.

இருவரும் சிறந்த தொடக்கத்தை வெளிப்படுத்தினார்கள். தவான் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன் பின் பட்டேலுடன் விஹாரி ஜோடி சேர்ந்தார். இவர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் பட்டேல் சிறப்பாக விளையாடி 47 பந்தில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 5 பவுண்டரி 2 சிக்ஸ் அடித்தார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் கில்கிறிஸ்ட் மற்றும் சிங் களம் இறங்கினர்.

சிங் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து மார்ஸ் களம் இறங்கி கில்கிற்ஸ்ட் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஸ் 18 ரன்னிலும், கில்கிறிஸ்ட் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அடுத்து வந்த வீரர்கள் ஐதராபாத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பஞ்சாப் அணியில் பொமர்ஸ்பச் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில் சம்மி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top