புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கோவிலில் பாட்டுக் கச்சேரியொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கச்சேரிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலரே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இத்தகராற்றின் போது, படுகாயம் அடைந்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top