ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மத நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு
காரணமாக அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன.
இதேபோல் அரசுக்கும், சன்னி பிரிவு போராளிகளுக்குமிடையே சமீப காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. பரஸ்பரம் நடத்தும் தாக்குதல்களில் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தின் சயோவுனா பகுதியில் உள்ள ஒரு விபச்சார விடுதிக்குள் இன்று புகுந்த மர்ம ஆசாமி, திடீரென தனது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில் 7 பெண்கள், 5 ஆண்கள் இறந்தனர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் ஈராக்கில், விபச்சாரம் மற்றும் மது அருந்துவது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால், அவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஷியா மற்றும் சன்னி பிரிவு மக்கள் கலந்து வசிக்கக்கூடிய சயோவுனா பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில் 399 மக்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.