புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

டி.எம்.சௌந்தர்ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக இசை ரசிகர்களை வருத்திக் கொண்டிருந்தது. த‌ற்போது அ‌ந்த கவலை மேகம் நல்லபடியாக நீங்கியிருக்கிறது.


காலங்கள் கடந்த பின்னும் டிஎம்எஸ்-ஸின் குரல் இசை ரசிகர்களை இன்னும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட அவரை அழைத்து பாராட்டு மழையில் நனைத்து அனுப்பினர் ரசிகர்கள். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அனைவருக்குமே பேரதிர்ச்சி. வீட்டில் வழுக்கி விழுந்து அவ‌ரின் தலையில் அடிபட்டிருந்தது.

அந்த காயத்துக்கான சிகி‌ச்சை முடிந்து திரும்பிய பின் மூச்சுத் திணறலுக்காக மீண்டும் மருத்துவமனை. இந்தமுறை அவ‌ரின் ரசிகர்கள் உண்மையிலேயே பயந்து போயினர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்களின் பிரார்த்தனையால் நோய் குணமாகி மந்தைவெளியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருக்கிறார் டிஎம்எஸ்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் அவா.
 
Top