புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காளான் உண்டதால் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் கிளம்பிய மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அமெரிக்காவின் Colorado மாகாணத்தின் University of Colorado பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், திடீரென பல்கலைக்கழக வகுப்பில் வைத்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார்.

பின்னர் வெளியில் சென்று நிர்வாணமாக நடக்கத் தொடங்கினார்.

அதனை தடுப்பதற்காக ஓடிச் சென்று பிடிக்கப்போன இரு நண்பிகளை உதைத்து தாக்கினார்.

பின்னர் அப்படியே இறங்கி வீதிகளிக் நடக்கத்தொடங்கினார்.

இச் சம்பவம் தொடர்பில், 911 இலக்கத்தினூடு, பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த பொலீசார், குறித்த நிர்வாண பெண்ணை தேட தொடங்கினார்கள்.

சில மணிநேரம் தொடர்ந்த தேடுதலின் பின்னர் குறித்த மாணவி நிர்வாண கோலத்தில் Chautauqua பூங்காவில் வைத்து பிடிக்கப்பட்டார்.

இரண்டு ஆண் மீட்பாளர்கள் உதவியுடன், ஒரு பெரிய கூடைக்குள் இடப்பட்ட அவர், பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மீது நடாத்திய விசாரணையில், தான் காளான் ஒன்றை உண்டதாகவும், அதன் பின் தனக்கு இவ்வாறான விபரீத எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் கூறும் காளான் தொடர்பில் உள்ள உண்மை தன்மை தொடர்பில் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது Facebook பக்கத்தை பார்வையிட்ட போது, இவர் தனது பலவிதமான சாகச விளையாட்டுக்கள் தொடர்பான படங்களை பதிவேற்றி இருந்தார்.

இவரது சாகச மனப்பான்மை காரணமாக, இவர் இவ்வாறான நிர்வாண நடைப்பயணம் கிளம்பினாரா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
 
Top