தாம்பரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, சமூக வலைதளத்தில் தவறான தகவல் வந்ததால், அவரை திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 23) தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், பழைய தாம்பரத்தை சேர்ந்த நிர்மல் (26) என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எம்.பி.ஏ பட்டதாரியான நிர்மல், தாம்பரத்தில் பிரிண்டிங் பிரஸ் மற்றும் திருமண அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடைகளை நிர்வகித்து வந்தார்.
நிச்சயதார்த்தம் முடிந்தபின்னர், ராதாவும், நிர்மலும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்தனர். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ராதா படிக்கும் கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவர் ராதாவை ஒரு தலையாக காதலித்தார். அவர் ராதாவின் வாழ்க்கையை கெடுக்கும் நோக்கத்தில் அவரை பற்றி அவதூறாக சமூக வலைதளத்தில் தவறான தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. ராதாவை காதலித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நிர்மலுக்கும், ராதாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து தவறான தகவலை அளித்த மாணவரை அழைத்து வந்து உண்மையை கூற சொன்னார்கள். அவரும் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் இரு தரப்பு உறவினர்களும் கலந்து ஆலோசித்து, அடுத்த மாதம் (ஜூன்) திருமணத்தை நடத்த செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில் நிர்மல் தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயாரும், உறவினர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராதா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உல்லாசமாக இருந்து விட்டு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நிர்மலை கைது செய்தனர். மேலும், நிர்மலின் உறவினர் ஜெயபிரகாஷ், பாலசந்தர் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவரது தாயார் சசிகலாவை தேடி வருகின்றனர்.