புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா -உத்தர பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் இரு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் போஜிபுற பகுதியில் தனது தாயுடன் வயலுக்கு சென்ற 10 வயது சிறுமி ஒருவரை, அந்த பகுதியின் செல்வந்தர் பப்பு என்பவரும், அவரது வீட்டில் வேலையாளாக பணிப்புரியும் பிரேம் ஷங்கர் என்பாரும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தாய் இல்லாத சமயத்தில் அந்த சிறுமியை கடத்திய இருவர்மீதும், சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரேம் ஷங்கரை போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மற்றொரு குற்றவாளியான பப்பு தலைமறைவாக உள்ளதாகவும், அவரை விரைவாக கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Top