காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுவீதியில் அடித்து, உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பெண்ணொருவர். இந்தியாவின் குஜராத் மாநிலம்
மீரட் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆண் தன்னை பல வருடங்களாக காதலித்து மோசம் செய்துவிட்டதாகவும், பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் அப்பெண் புகார் கூறியுள்ளார்.
ஏமாற்றம் அடைந்ததால் கோபம் அடைந்த அந்த பெண் காதலனின் சட்டையை பிடித்து இழுத்து நடுவீதியில் அடித்து உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை சாலையில் சென்றவர்கள் பார்த்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொலிஸில் காதலனை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண் அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவன் திருந்தி வாழ நினைத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
ஆனால், கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் என்ற வாலிபர் செய்தியாளர்ளிடம் கூறியதாவது, இது திட்டமிட்ட சதி. அந்தப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. இது போன்ற குற்றச்சாட்டை ஏற்கனவே என் மீது சுமத்தினார்கள்.
ஆனால் நான் குற்றமற்றவன் என நிரூபித்து வெளியே வந்தேன். இப்போது மறுபடியும் அந்தப் பெண் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். திருமணம் செய்வதை விட சிறைக்கு செல்வதே மேல் என்றார்.