ஐ.பி.எல். கிரிக்கெட் 61வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு தொடங்கியது. இதில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ஹசி மற்றும் விஜய் களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க ராஜஸ்தான் அணி மிகவும் போராடியது. இருவரும் ஜோடி சேர்ந்து 83 ரன்கள் எடுத்தனர். ஹசி 40 ரன்கள் எடுத்த நிலையில் பின்னி பந்தில் போல்ட் ஆனார்.
பின்னர் வந்த ரெய்னா 1 ரன்னிலும், கேப்டன் தோனி 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விஜய் சிறப்பாக விளையாடி 50 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் பிராவோ ஜோடி சேர்ந்து இறுதியில் அணியின் ரன்னை உயத்தினர். ஜடேஜா 12 ரன்னிலும், பிராவோ 23 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 70 ரன்களும், பின்னி 41 ரன்களும் எடுத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக