உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர்.
இந்த 3 குழந்தைகளும் எனக்கு பிறந்தவை என்று அவரது 30 ஆண்டுகால நெருங்கிய நண்பர் மாரிக் லெஸ்டர்(54) மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் பிரபல பிரிட்டைன் நடிகர் ஆவார்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்த வரை எனது குழந்தைகளை பார்க்க நான் அனுமதிக்கப்பட்டேன். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் என்னிடம் இருந்து குழந்தைகளை விலக்கியே வைத்துள்ளனர். நான் விந்து தானம் அளித்ததன் மூலம்தான் மைக்கேல் ஜாக்சனின் 3 குழந்தைகளும் பிறந்தனர்.
நான் கூறுவது உண்மைதான் என்பதை நிரூபிக்க மரபணு (டி.என். ஏ.) பரிசோதனைக்கு நான் தயார். இதேபோல், மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளிடமும் மரபணு பரிசோதனை செய்து அவர்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளிடம் மரபணு பரிசோதனை நடத்த கோர்ட் அனுமதிக்க கூடாது என அவரது குடும்பத்தாரின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மரபணு பரிசோதனைக்கு கோர்ட் அனுமதி அளிக்குமா? 3 குழந்தைகளும் மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்த குழந்தைகள் தானா? என்பது விரைவில் தெரியவரும்.
0 கருத்து:
கருத்துரையிடுக