பெங்களூரில் காதல் தகராறில் காதல் ஜோடி ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்மகளூரை சேர்ந்தவர்கள் சசிதர் (வயது 25), ரேஷ்மி (20)
இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் பெங்களூர் மடிவாளா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தி கொண்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இருவரும் சுயநினைவை இழந்து உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சசிதர், ரேஷ்மிக்கு இடையேயான காதல் முறிந்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி நடந்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆனாலும் காதலர்களுக்கு சுயநினைவு திரும்பிய பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று அவர்கள் கூறினார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக