திருகோணமலை - ஹபரண வீதியில் இன்று (12) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
.
கல்பொத்த பகுதியில் சிறிய ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அறுவரில் மூவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக