புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்த மாதம் கரிமேடு என்ற படம் தமிழில் வெளியாகிறது. ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.


ஸ்ரீ தேனாண்டாள் ஒரு படத்தை வெளியிடுகிறது என்றால் அது நிச்சயம் வசூல் செய்யும் என்பது சினிமா வரலாறு. படம் எடுப்பதைவிட எந்தப் படம் வசூ லிக்கும் என்பதை கணிப்பதில் ராம.நாராயணன் கில்லாடி. கரிமேடு படம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும்.

கன்னடத்தில் தண்டுபால்யா என்ற பெயரில் 2012 ல் ஒரு படம் வெளியானது. கர்நாடகாவில் தண்டுபால்யா என்ற ஒரு கொள்ளைக் கும்பல் மாநிலத்தையே கதிகலக்கிக் கொண்டிருந்தது. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வீட்டிற்குள் நுழைந்து மொத்தத்தையும் சுருட்டுவதுதான் இந்த கொள்ளை கும்பலின் மெயின் க்ரைம். கொலை, கற்பழிப்புகள் அடிஷனல். ஒருகட்டத்தில் கொள்ளைக்கு இணையாக மாறியது இந்த அடிஷனல் குற்றங்கள்.

இந்த கும்பலின் பெயரில் இதுவரை 91 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளன. கொலைகள் 106. கொள்ளைகள் இருநூறுக்கும் மேல். இந்த பயங்கர கொள்ளை கும்பலின் கதையை படமாக்க இயக்குனர் சீனிவாச ராஜு முயன்ற போது சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. என்னுடைய நாவலை படமாக்குகிறார்கள் என்று கோர்ட்டுக்குப் போனார் ஒரு பத்திரிகையாளர். கடுமையான எதிர்ப்புக்கிடையில் இந்தப் படத்தை சீனிவாச ராஜு எடுத்தார். அவருக்கு பக்க பலமாக இருந்தவர் பூஜாகாந்தி. கொக்கி படத்தில் அறிமுகமானவர்.

தண்டுபால்யா கொள்ளைக் கும்பலின் முக்கியமான நபராக பூஜா காந்தி நடிக்க ஒப்புக் கொண்டார். அவர்தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். பீடி புகைக்க வேண்டும், கள் குடிக்க வேண்டும், பன்றியை தோளில் சுமக்க வேண்டும்... எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னார் பூஜா காந்தி.

அடுத்ததுதான் இன்னும் கடுமையானது. போலீஸ் கஸ்டடியில் மேலாடை இல்லாமல் சித்திரவதை செய்யும் காட்சியில் தத்ரூபமாக நடிக்க வேண்டும். வளர்ப்பானேன்... அரை நிர்வாணமாக தோன்ற வேண்டும். அதற்கும் ஓகே சொன்னார் பூஜாகாந்தி.


படம் தயாரானது. பூஜா காந்தியின் அரை நிர்வாண சித்திரவதை காட்சிதான் படத்தின் துருப்புச்சீட்டு. எதிர்ப்பு, ஆதரவு என படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி. ஆச்சரியமாக கர்நாடக அரசின் சிறந்த நடிகைக்கான விருது பூஜாகாந்திக்கு கிடைத்தது.

பூஜா காந்தியின் அரை நிர்வாண படத்தைப் பார்த்த போதே இந்தப் படம் கண்டிப்பாக தமிழில் வெளியாகும் என்று தோன்றியது. அதனை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுவது சர்ப்ரைஸ். ராம.நாராயணன் தமிழில் அதிக பக்திப் படங்களை எடுத்தவர். அருந்ததி போன்ற ஆவிப் படங்களை வெளியிட்டவர். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற கதைத் திருட்டு படத்தை தயாரித்தவர். இப்போது கரிமேடுவரை வந்திருக்கிறார். எந்தப் படமாக இருந்தாலும் காசு ஒன்றுதான் என்ற தத்துவத்தை கசடற கற்றவர்.


நக்சல்பாரி இயக்கம் எழுச்சியுற்று அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸம் ஒரு பேசுபொருளாக மாறிய காலகட்டத்தில் அதனை அறுவடை செய்யும்விதமாக ஏவிஎம் இவரிடம்தான் சிவப்பு மல்லி என்ற கம்யூனிசப் பின்னணி கொண்ட படத்தை இயக்கும் பொறுப்பை தந்தது. பக்தியோ, ஆவியோ, கம்யூனிஸமோ... எதுவாக இருந்தாலும் அதில் கரன்சியை அடையாளம் கண்டு கொள்ளும் திறமை படைத்தவர்.

தண்டுபால்யா படத்தின் காட்சிகள் கொடூரமானவை. வீடு ஒன்றில் நுழையும் கொள்ளைக் கும்பல் இளம் பெண்ணை தலையில் கட்டையால் தாக்கி ஒவ்வொரு உடையாக களைந்து பாலியல் பலாத்காரம் செய்யும். வீட்டில் சீரியல் பார்ப்பது போல படிக்கட்டில் அமர்ந்து இதனை பீடி புகைத்தபடி பூஜா காந்தி பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பெண்ணின் முகத்தில் காலால் மிதிப்பது, அவள் கெஞ்ச கெஞ்ச உடைகளை களைவது... இது சின்ன சாம்பிள். போலீஸின் சித்திரவதைக் காட்சிகள் இதைவிட கொடூரமானவை.


தண்டுபால்யா போன்ற வன்முறைகள்; பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனை படமாக்கும் போது, இயக்குனர்களின் பொறுப்பு பன்மடங்காகிறது. நிஜத்தை காட்டுகிறேன் என்று பார்வையாளர்களின் மனதில் அழுக்கையும் வன்முறையும் விதைக்காதபடி இருக்க வேண்டும் படத்தின் காட்சிகள். தண்டுபால்யா அதனை செய்யவில்லை என்பது கர்நாடகாவிலுனள்ள சமூக அமைப்புகளின் குற்றச்சாற்று. இப்போது படம் தமிழுக்கு வருகிறது. படத்தின் போஸ்டர்கள் ராம.நாராயணனின் எதிர்பார்ப்புப்படி தியேட்டரில் ரசிகர்களை அள்ளி குவிக்கதான் போகிறது.

கரிமேடு தமிழின் கறுப்பு புள்ளி ஆகிவிடக் கூடாது.







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top