புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் சுவாச கோளாறால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் டி.எம்.எஸ்.

இந்த நிலையில் கடந்த வாரம் மந்தைவெளியில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top