புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவின் மதீனா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த பணிப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.


மட்டக்களப்பு ஏறாவூர் ஹிதாயத் நகரைச் சேர்ந்த வெள்ளக்குட்டி முஹைதீன் ஜனூபா (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமண வைபவமொன்றிற்கு கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த போதே இந்த வாகன விபத்து இடம்பெற்றதென்று தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக விபத்தில் மரணமடைந்தவரின் சகோதரி வெள்ளக்குட்டி முஹைதீன் ஹஸீனா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாகன விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த பெண் உட்பட வீட்டு எஜமானியும் அவரது 3குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top