400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் மாவின் விலை அதிகரிப்பு?
400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையும் டொலரின் பெறுமதிக்கேற்ப ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு பால்மாவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு பால்மாவை ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிரதான நாடுகள், ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலையை 5000 டொலர்களால் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பால் மா இறக்குமதிக்காக அறவிடப்படும் இறக்குமதி வரியையும் குறைக்குமாறு பால் மா உற்பத்தி நிறுவனங்கள், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக