மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து இன்று (12) இலங்கைக்கு வந்த நபர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் குறித்து மிரிஹான பொலிஸ் விசேட பிரிவினர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சந்தேகநபர் கடந்த ஜனவரி மாதம் மலேசியா சென்றுள்ளதாகவும் மற்றுமொரு நபருடன் இணைந்து இவ்வாறு நிதி மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக