காதல் ஜோடிகளின் உல்லாச புரியாக யாழ். கீரிமலை கடற்கரை மாற்றம் பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் தமது விசனத்தை
வெளியிட்டுள்ளனர்.
இறந்தவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடத்தப்படும் இந்த கடற்கரையோரம், இளம் காதல் ஜோடிகளின் அநாகரிக நடவடிக்கையானது பல்வேறு தரப்பினரையும் முகம் சுழிக்க வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிதிர்க்கடன் நிறை வேற்றப்படும் கடற்கரையோரத்தில் நான்கு ஜோடிகள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமை
அவதானிக்கப்பட்டு, அங்கிருந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை நகுலேஸ்வரம் ஆலயத்தில் பொலிஸ் நிலையமொன்று உள்ளபோதிலும் அருகிலுள்ள இந்த கடற்கரையோரம் காதல் ஜோடிகளின் அநாகரிக செயற்பாடு இடம்பெறுவதனை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கப் படுவதில்லையெனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.
புனித இடமான இப்பகுதியில் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகள் தவிர்க்கப்படல் வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக