பிரிட்டினிலுள்ள லீச்செஸ்ட்டரில் மேரியட் சாலையில் வாழ்ந்து வந்த குத்துச்சண்டை வீரர் ஷான் குமின்சைக்(Shaun Cummins) கொலைச் செய்து துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனைப்
பெட்டியில் மறைத்து வைத்திருந்த அவரது உதவியாளாரான தாமஸ் டங்க்லீக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்துள்ளது.
ஷான் குமின்ஸ் கடந்த 2004ம் ஆண்டு ஒரு மோட்டார் பைக் விபத்தில் சிக்கியதால் இவருக்கு இடுப்புக்குக் கீழ் பகுதிகள் செயலிழந்து போனது.
இதனால் இவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை, தாமஸ் டங்க்லீக்கு(Thomas Dunkley) வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 12ம் திகதியன்று குமின்சைக் கவனித்து வந்த செவிலி ஒருவர், சில நாட்களாக அவரை வீட்டில் காணவில்லை என்று பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பொலிஸ் வந்து அவரது வீட்டைச் சோதனை செய்த பொழுது குளிர்சாதனப் பெட்டியில் குமின்சின் உடல் பிளாஸ்டிக் பையில் போட்டு டேப் வைத்து ஒட்டப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.
இந்தக் கொலையைச் செய்த டங்க்லீ தலைமறைவாகயிருந்தார். எனினும் பொலிசார் அவரைத் தேடிப்பிடித்துக் கைது செய்தனர்.
பொலிஸ் விசாரணையிலும், நீதிமன்றத்திலும் குமின்சைத் தான் கொலை செய்யவில்லை என்றும் இவர் இயற்கையாக தான் மரணம் அடைந்தார் எனவும் டங்க்லீ கூறினார். ஆனால் உடலை வெட்டி மறைந்து வைத்ததை மட்டும் ஒத்துக்கொண்டார்.
இது குறித்து காவலதிகாரி மேத் ஹியூசன் கூறுகையில், டங்க்லீக்கு குமினிச் சம்பளம் தராததாலும், கேலி பேசியதாலும் மனம் வெறுத்து இது போன்ற செயல்களை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக