நடிகர், நடிகையர்கள் இரண்டு படங்களில் இணைந்து நடித்தாலே கிசு கிசு கொடி கட்டி பறக்கும். சில தகவல்கள் உண்மையாகப் போய்விடுவிடுவதுண்டு. பாலிவுட், கோலிவுட்
திரைப்பட உலகில் பிரபலமாக நடித்த நட்சத்திர ஜோடிகளின் காதல்கள் ஒரு சில மட்டுமே திருமணம் வரை சென்றுள்ளது.
சில காதல்கள் திருமணம் வரை போய் உடைந்து போயுள்ளது. ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளியான பிரபல காதல் ஜோடிகளைப் பற்றியும் அவர்களின் காதல்கள் பற்றியும் ஒரு சின்ன ப்ளாஸ் பேக்
விஜயகாந்த் – ராதிகா
கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு போன விஜயகாந்த், அதிக அளவில் ராதிகா உடன் இணைந்து நடித்தார். இருவரின் காதல் திருமணம் வரை போனது. சில காரணங்களினால் இந்த காதல் உடைந்து போய் பிரேமலதாவை கரம் பிடித்தார் விஜயகாந்த்.
பிரபு – குஷ்பு
90களில் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி பிரபு – குஷ்பு தான். தர்மத்தின் தலைவன் படத்தில் முதன் முதலாக சேர்ந்த ஜோடி பல படங்களில் இணைந்து நடித்து வெற்றி பெற்றது. சின்னத்தம்பி சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பின்னர் பிரபு – குஷ்புதான் சரியான ஜோடி என்று பேசப்பட்டது. கடைசியில் பிரிந்து விட்டது இந்த ஜோடி. இயக்குநர் சுந்தர் .சி யை திருமணம் செய்து கொண்டார் குஷ்பு.
சிம்பு – நயன்தாரா
சிம்பு உடன் பல கதாநாயகிகள் பெயர் கிசுகிசுக்கப்பட்டாலும் நயன்தாரா உடனான காதல் பரபரப்பாக பேசப்பட்டது. இடையில் விரிசல் ஏற்பட்டு கடைசியில் உடைந்து போனது.
பிரபுதேவா – நயன்தாரா
திருமணம் வரை போனது பிரபு தேவா – நயன்தாரா காதல். தன்னுடைய காதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்த பிரபு தேவா, குழந்தைகள் மீதான பாசத்தினால் நயன்தாராவை பிரிந்து விட்டார்.
அமிதாப் – ரேகா
கோலிவுட் பட உலகில் மட்டுமல்ல பாலிவுட் பட உலகிலும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடிகள் பிரிந்துள்ளன. அமிதாப் பச்சன் – ரேகா காதல் பிரபலமானது. ஆனால் இந்த ஜோடி பிரபல ஜோடி பிரிந்து போனது.
சல்மான் கான் காதல்கள்
சல்மான் கான் உடன் பல நாயகிகள் கிசுகிசுக்கப்பட்டனர். இதில் சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பிரபலமானவர்கள். ஆனால் சல்மான் காதலித்த நாயகிகள் அனைவருமே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர்.
விவேக் ஓபராய்-ஐஸ்வர்யா
சல்மான் கான் காதல் முறிவுக்குப் பின்னர் விவேக் ஓபராயை காதலித்தார் ஐஸ்வர்யா ராய். அந்த காதலும் முறிந்து போகவே கடைசியில் அபிஷேக் பச்சனை கரம் பிடித்தார் ஐஸ்வர்யா ராய்.
சித்தார்த் – ஸ்ருதி ஹாசன்
பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் தெலுங்கு படத்தில் நடித்த போது ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமானார். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் அளவிற்கு நெருக்கமானார்கள் கடைசியில் இந்த ஜோடி பிரிந்து விட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக