45 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் பலாத்தகாரம் செய்து விட்டு மயக்கமடைந்த நிலையில் பற்றைக் காட்டுக்குள் போட்டுவிட்டுப் போன சம்பவம் நேற்று முன்தினம் மலை வெல்லாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ள
து.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள கறுத்தப்பாலத்து ஆற்றில் உடுப்புகளைக் கழுவிக்கொண்டு (சலவைத் தொழில்) வீதிக்கு 45 வயது மதிக்கத்தக்க மண்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது டொல்பின் ரக வெள்ளை வான் ஒன்றில் வந்த சிலரால் அம்பெண்ணிடம் எங்கே போகப் போகின்றீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த பெண் நான் மண்டூரிலுள்ள எனது வீட்டுக்குப் போகப் போகின்றேன். இங்கு உடுப்புகளைக் கழுவிக்கொண்டு வருகின்றேன் என கூறியுள்ளார்.
எம்முடைய வாகனத்தில் வாருங்கள் நாங்கள் ஏற்றிக்கொண்டு விடுகின்றோம் என கூறி அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்று அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்துவிட்டு அப்பெண் மயக்க முற்றநிலையில் அங்கேயே போட்டு விட்டு அவர்கள் ஓடியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பெண் ஒருவர் காட்டுக்குள் அனாதரவாகக் கிடப்பதைக் கண்டு பெண்ணை மீட்டு வீதியால் சென்ற முச்சக்கர வண்டியினை மறித்து உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகவும் பரிசோதனைகளுக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து மயக்கம் தெளிந்த நிலையில் குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் வானில் வந்தவர்கள் மண்டூர் பகுதியில் வீதி வேலை செய்பவர்கள். அவர்களை எனக்கு தெரியும். எனக் கூறியுள்ளார்.
இத்தகவலை வைத்துக் கொண்டு வெல்லாவெளி பொலிசார் மண்டூர் பிரதேசத்தில் வீதி ஒப்பந்த வேலையிலீடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்கள நான்கு பேரினை சந்தேகத்தின் போரில் கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக