அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் மொடலிங் துறையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்ததற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்திலுள்ள உயர் பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதான ஒலிவியா என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை மொடலிங் துறையில் விருப்பங்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இது பாடசாலை நிருவாகத்திற்கு தெரியவந்துள்ளளது.
இதனையடுத்து ஆசிரியையின் கவர்ச்சி படத்தினை அவரிடமே அது ஒலிவியா என உறுதிப்படுத்தியுள்ளார் அப்பாடசாலையின் அதிபர். மொடலிங் உலகிற்காக ஒலிவியா தனது பெயரை விக்டோரியா ஜேம்ஸ் என வைத்துள்ளார்.
பின்னர் அன்றே ஒலிவியாவை பணியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஒலிவியா கூறுகையில், நான் இவ்வருட இறுதியில் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு மொடலிங்கில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்துவிட்டது.
மொடலிங் ஒரு குற்றமல்ல. நீச்சலுடையில் மொடலிங்கிற்காக போஸ் கொடுத்தேன் தவிர நான் ஆபாசப்படங்களிலா நடித்தேன்?. ஆனால் எனக்கு இப்போதும் கூட ஆசிரியர் பணியை தொடர விருப்பம் உள்ளது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக