புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் 80 வயது சீனியர் சிட்டிசன் ஒருவர், பொழுது போகாமல் தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் தண்டவாளம் அமைத்து, குட்டி ரயிலில் தினமும் ஜாலியாக ஒரு ரவுண்டு
வருகிறார்.

இங்கிலாந்தின் ஷார்ப்ஷயர் பகுதியில் பிரிட்ஜ்நார்த் என்ற இடத்தை சேர்ந்த தாத்தா பில் பேரிட் (80). தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், வீட்டில் தற்போது ‘அக்கடா’ என்று இருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே, ரயிலில் போவது என்றால் இவருக்கு அலாதி ஆசை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரயில் பயணம் செய்வார். ரிட்டயர் ஆன பிறகும், அவ்வப்போது போய் வந்தார். தற்போது தள்ளாத வயது என்பதால், பயணங்கள் ‘முடிவதில்லை’.

இதனால், தீவிரமாக யோசித்த பேரிட் தன் வீட்டை சுற்றியுள்ள 13 ஏக்கர் தோட்டத்தில் தண்டவாளம் அமைத்தார்.

25 நீளமுள்ள குட்டியூண்டு ரயிலை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தார். 3 ஆண்டு தீவிரமாக உழைத்து, தோட்டத்தில் சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு தண்டவாளம் அமைத்திருக்கிறார். இதற்காக ரூ.19 லட்சம் செலவு செய்திருக்கிறார்.

தினமும் தனது ரயிலில் ஏறி தோட்டத்தை ரவுண்டு அடித்து வருகிறார். "என் ரயில் ஒருபோதும் லேட்டாக வந்ததில்லை" என்று சொல்லி சிரிக்கிறார் மினி ரயில்வேக்கு சொந்தக்காரரான தாத்தா.










0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top