ரசிகர்கள் மச்சான் என செல்லமாக அழைப்பவர் இந்தியாவின் அழகு பெண் நமீதா.
விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா.
குஜராத் அழகியான நமீதா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நமீதா என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது உயரமும், மச்சான்ஸ் என்பதுமே.
நமீதா தனது ரசிகர்களை பாசத்துடன் மச்சான் என்று தான் அழைப்பார். இப்படி அழைப்பதால் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.
இதுகுறித்து நமீதா கூறுகையில், எனக்கு சென்னை தான் பிடிக்கும். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்.
ரசிகர்களால் தான் சென்னையில் இருக்கிறேன், திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்வேன்.
சினிமாவுக்கு வந்த புதிதில் ஷூட்டிங்ஸ்பாட்டில் லைட்பாய் முதல் அனைவரும் ஒருவரையொருவர் மச்சான் என்று அழைப்பார்கள்.
அதில் அன்பு இருந்ததால் அந்த வார்த்தை என்னை வெகுவாக கவர்ந்தது. அதனால் தான் நான் ரசிகர்களை மச்சான் என்று அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக