புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவைச் சேர்ந்த பெத்தானி ஹில்டன் எனும் இந்த யுவதி  10 வருடங்களுக்கு முன்னர் அவர் 13 வயது சிறுமியாக இரந்தபோது கடலில்
நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டிருந்த வேளை அவரை சுறா தாக்கியது. இதனால் அவரின் இடது கை முற்றாக துண்டிக்கப்பட்டது.

எனினும் இப்பயங்கர சம்பவத்துக்காக கடலையொ நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதையொ அவர் வெறுக்கவில்லை.

மாறாக அவ்விளையாட்டில் தீவிரமாக பயிற்சிகளை ஆரம்பித்த அவர், தொழில்சார் நீhசறுக்கல் போட்டிகளிலும் பங்குபற்ற ஆரம்பித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிய அவர் சர்வதேச போட்டிகள் பலவற்றில் முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

23 வயதாகும் பெதானிக்கும் அவரின் காதலரான அடம் டேர்ஸ்க்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனது சுயசரிதை நூலையும் 2004ஆம் ஆணடில் பெதானி வெளியிட்டார்.

சோல் சேர்பர் எனும் தலைப்பிலான இந்நூலை அடிப்படையாக வைத்து திரைப்படமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top