புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 5ஆம் தேதி ராமு என்ற 32 வயது தொழிலாளி கறுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து வழ்க்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார், மனைவி ரதியின் மீது ஒரு கண் வைத்திருந்தனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே விசாரணை வலை மனைவி மீது திரும்பியது. போலீஸ் 'விசாரணை'யில் கள்ளகாதலன் ராஜசேகரன் என்பவருடன் சேர்ந்து கணவன் கழுத்தை அறுத்துக் கொண்றதை ஒப்புக்கொண்டார். உடனடியாக கொலைகாரக் கூட்டாளிகளை போலீஸ் கைது செய்துள்ளது.

வாக்குமூலத்தில் வழக்கம் போல் கணவன் குடிகாரர், குடித்து விட்டு அடிப்பார் என்று துவங்கி ஒரு கதை கூறியுள்ளார் கொலைகார மனைவி:

கணவர் ராமுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது அருந்தி வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு இரவில் தூங்கி விடுவார். இதனால் 'செக்ஸ்' ஆசை நிறைவேறாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகரன், என்னிடம் அன்பாக பேசி பழகினார். இதனால் கணவரை வெறுத்தேன்.

நாங்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்போம். கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலும் ஜாலியாக இந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கணவர் ராமு பார்த்துவிட்டார். எங்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தார். இதனால் ஒன்று சேர முடியாமல் தவித்தோம்.

கணவரை தீர்த்து கட்டி விட்டால் ஒன்றாக வாழலாம் என்று நினைத்தோம். ராஜசேகரனும் எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தினமும் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கும் ராமுவை மின்தடை ஏற்படும் நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டோம்.

சம்பவத்தன்று இரவு திட்டப்படி கத்தியுடன் வந்த ராஜசேகரன் கணவர் ராமுவை கொலை செய்ய முயன்றபோது 2 பேருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. கணவர் வீட்டு கதவை தட்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் கதவை திறக்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சண்டையை பார்த்தேன்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கணவர் ராமுவின் கழுத்தை அறுத்து விட்டு ராஜசேகரன் தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்து விட்டார். மர்ம நபர்கள் கணவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடி அழுதேன்.

இவ்வாறு தன் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top