அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பர்னி ஃபவுலர் (37). இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அவர்களில் மூவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 7
குழந்தைகளுடன் 4வது மனைவியுடன் இவர் வாழ்ந்து வருகிறார்.
கடந்த மாதம் இவரது மகள் லெய்லா ஃபவுலர் (8) உடல் முழுக்க கத்திக் குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
சதை பிடிப்புடன் சிகப்பாக இருந்த மர்ம மனிதன் அவளை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டதாக அவளது 12 வயது அண்ணன் பெற்றோரிடம் கூறினான்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த லெய்லா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
மர்ம மனிதனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது கொலையான சிறுமியின் அண்ணன் கூறிய வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை உணர்ந்தனர்.
இதனையடுத்து, அவனை ‘உரிய’ முறையில் விசாரித்தபோது, ‘தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் நான்தான் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். எதிர்பாராத விதமாக அவள் இறந்து விட்டாள்’ என்ற உண்மையை கக்கினான்.
இவன் மீதான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க நாட்டின் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்கக் கூடாது என்பதால் பிலேசர் வில்லியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அவன் அடைக்கப்பட்டுள்ளான்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 23 வயதுக்கு பின்னர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து அவன் விடுதலை ஆவான். குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் போதிய சாட்சிகள் இல்லாத பட்சத்தில் இடைக் காலத்திலேயே அவன் விடுதலை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
8 வயது மகளை இழந்த வேதனையை சுமந்தபடி, இளம் குற்றவாளியான தனது 12 வயது மகனை வாரம் இருமுறை சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று அவனது தந்தை சந்தித்து வருகிறார்.

0 கருத்து:
கருத்துரையிடுக