புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொல்கத்தாவில், சிகிச்சைக்காக வந்த ஒரு பெண்ணின் உடலில் இருந்து அரிய வகை புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்தவர் இஸ்ரத்ஜஹான்(46). இவருக்கு குடல் இரைப்பையில் புற்றுநோய்க் கட்டி வளர்ச்சியடைந்திருப்பது தெரியவந்தது.

பெருங்குடலின் ஒரு பகுதியில், சிறுநீர்ப்பைக்கு அருகில் ரெட்ரோபெரின்னியல் வகையச் சார்ந்த இந்த அரிய வகை நோயானது, பெரும்பாலும் பெண்களையே பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 50-க்கும் குறைவானவர்களே இந்த நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே 2 அறுவை சிகிச்சைகள் முடிந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர்.
மேலும் மூன்று ஆண்டுகளாகவும் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டிருந்ததால், அவருக்கு அதிகப்படியான மருத்துவ கவனிப்பு தேவைப்படுமென உணர்ந்த மருத்துவர்கள். இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சிகிச்சையில், 20 - க்கு 7 செ.மீ அளவுள்ள கட்டி அகற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வலி நிவாரணிகளிலேயே உடல் நலம் பாதித்த பெண் மூன்று வருடம் சமாளித்தது குறித்து மருத்துவர்கள் வியப்பு தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்த அப்பெண் வீட்டிற்கு அனுப்பபட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top