புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும்போது தந்தை பெயர் கேட்கக்கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு மஹாராஷ்ட்ரா அரசு
உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையின்போது தந்தை பெயர் குறிப்பிடவேண்டியுள்ளது. ஆனால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் வளர்ப்பு பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும்போது தந்தை பெயரை குறிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால் கல்வி அறிவு பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெரும்பாலான விபசார பெண்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முன்வராமல் இருந்து வந்தனர். இதனை கருத்தில்கொண்டு மராட்டிய அரசு கடந்த வாரம் உத்தரவு ஒன்றை கல்வி நிலையங்களுக்கு பிறப்பித்தது.

இதன்படி பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிலையங்களில் விபசார பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் கல்வி அறிவு பெறுவதற்காக தங்களது குழந்தைகளை சேர்க்கும்போது தந்தையின் பெயர் மற்றும் வசிப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கல்வி அறிவு பெரும் சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்கள் விபசார பெண்கள் மற்றும் திருநங்கைகளின் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மகிழ்ச்சியை தருவதாக விபசார பெண்கள் மற்றும் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top