நடிகை சிம்ரன் கடத்தப்பட்டதாக சென்னையில் பரபரப்பு பதாகை ஒட்டப்பட்டு உள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், வீதியோர சுவர்களில் இந்த பதாகைகள்
ஒட்டப்பட்டு இருந்தன. போவோர் வருவோரை இது ஈர்த்தது.
சிம்ரனை யார் கடத்தியது. பதாகை உண்மையா? போலியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபடி சென்றனர். பத்திரிகை அலுவலகங்களுக்கும் சிம்ரன் கடத்தப்பட்டது நிஜமா என்று போன்கள் வந்தன.
இதுகுறித்து விசாரித்தபோது டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பர பதாகை என தெரிய வந்தது. டி.வி. சேனல் ஒன்றில் ‘விளையாட்டு நிகழ்ச்சி’ ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்பதாகைகள் ஒட்டி பீதி கிளப்பியுள்ளனர்.
சிம்ரன் கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் தீபக்கை கதாநாயகனாக வைத்து புதுப்படம் தயாரிக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியும் நடத்துகிறார்.

0 கருத்து:
கருத்துரையிடுக