புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகை ஜியா கான் தற்கொலை-புகைப்படம்
பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான்(வயது 25), ராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் அறிமுகமானவர்.


மும்பை ஜுஹு பகுதியில் உள்ள வீட்டில் தாயார், சகோதரியுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜியா கானின் தாயாரும், சகோதாரியும் கடைக்கு சென்று விட்டனர்.

ஜியா கான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கடைக்கு சென்று விட்டு நள்ளிரவில் ஜியா கானின் தாயாரும், சகோதரியும் வீடு திரும்பினர்.

அப்போது ஜியா கான் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து, இருவரும் அலறினர்.

இதையடுத்து பொலிசார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் ஜியா கான் ஏற்கனவே இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், ஜியா கான் தூக்கில் தொங்குவதற்கு தன் துப்பட்டாவை பயன்படுத்தியுள்ளார்.

எதற்காக தற்கொலை செய்தார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சுராஜ் தான், ஜியா கானிடம் கடைசியாக மொபைல் போனில் பேசியுள்ளார்.

ஜியாவும், சுராஜும் காதலித்தாக தெரிகிறது. இந்த காதல் தோல்வியடைந்தால் ஜியா தற்கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் சுராஜிடம் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top