இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 115 சிகரெட் பெட்டி களுடன் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இருவர் கைது
செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
மாலைதீவில் இருந்து வந்த யு. எல். 106 விமானத்தில் வந்த இருவரே இவ்வாறு சிகரட் பெட்டிகளுடன் கைதாகியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியானவை எனவும் அவை அரசுடமையாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கம்பஹா மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
பிரதி சுங்கப் பணிப்பாளர் கே. ஏ. தர்மசேன தலைமையிலான குழு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டது.

0 கருத்து:
கருத்துரையிடுக